நயன்தாரா சிகிச்சை பெற்ற மருத்துவமனையில் விசாரிக்க முடிவு
நயன்தாரா சிகிச்சை பெற்ற மருத்துவமனையில் விசாரிக்க முடிவு
நயன் தாரா - விக்னேஷ் சிவனின் இரட்டைக் குழந்தைகள் விவகாரம் பூதாகரமாகி வருகிறது... கர்ப்ப காலத்தில் தாய் மற்றும் சேய் உடல் நலத்தை கண்காணிக்கும் சுகாதாரத் துறையின் பிக்மி எண் நயன்தாரா பெறவில்லை என தகவல் வெளியாகியுள்ளது...
இதனால் நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி வாடகை தாய் வழியாகவே குழந்தை பெற்று இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
ஆனால் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றிருந்தால் அரசின் விதிமுறைகளை அவர்கள் மீறியுள்ளார்களா என சுகாதாரத்துறை விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.
அதன்படி, இருவரிடமும் கடிதம் வாயிலாகவோ, நேரில் அழைத்தோ விசாரணை மேற்கொண்டு அறிக்கை தயார் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், வாடகை தாய் பெற நயன்தாரா எப்போது முன் பதிவு செய்தார், தம்பதிக்கு குறைபாடு கண்டறியும் பரிசோதனை நடத்தப்பட்டதா, சிகிச்சைகள் எத்தனை நாட்கள் வழங்கப்பட்டது என்பது குறித்தும் விளக்கங்கள் கோரப்பட உள்ளன.
சென்னையைச் சேர்ந்த பிரபல தனியார் மருத்துவமனையில் நயன்தாரா உடல் நலக்குறைவால் அண்மையில் சிகிச்சை பெற்ற நிலையில், சம்பந்தப்பட்ட மருத்துவமனை வாடகை தாய் சிகிச்சை அளித்ததா என்பது குறித்தும் விசாரிக்கப்பட உள்ளது.
சம்பந்தப்பட்ட மருத்துவமனை விதிகளை மீறி இருப்பின் சட்டப்படி கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.