முறிந்து விழுந்த மரம்... குன்னூர்- உதகை இடையே ரயில் சேவை பாதிப்பு
நீலகிரி மாவட்டம் குன்னூர்- உதகை இடையிலான மலை பாதையில், மரங்கள் முறிந்து தண்டவாளத்தில் விழுந்துள்ளதால், ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அருவங்காடு- கேத்தி இடையே தண்டவாளத்தில் மரக்கிளைகள் கிடந்ததால் முன்கூட்டியே ரயில் நிறுத்தப்பட்டது. தகவல் அறிந்து வந்த ரயில்வே ஊழியர்கள், மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர். இதையடுத்து சுமார் ஒரு மணி நேரம் தாமதத்திற்கு பிறகு மலை ரயில் சேவை தொடங்கியது.
Next Story