இந்தியாவுக்கு நன்றிக்கடன் பட்ட இலங்கை | India | Sri Lanka
இந்தியாவுடனான உறவை மேலும் வலுப்படுத்திக் கொள்வதில் சிறப்பு கவனம் செலுத்தி வருவதாக, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 'உலகின் தெற்கு நாடுகளின் குரல்' மாநாட்டையொட்டி, இணையவழி மூலம் உரையாற்றிய அவர், இந்தியாவுடன் நெருக்கமான பொருளாதார ஒருங்கிணைப்பு, ஜப்பான் முதல் இந்தியா வரை பொருளாதார ஒத்துழைப்பு உடன்படிக்கைகளை ஏற்படுத்த வேண்டுமென தெரிவித்தார். இந்தியப் பிரதமர் மோடி மற்றும் இந்தியாவின் பெருந்தன்மையால், இலங்கை மக்கள் இரண்டு வருடங்களாக எதிர்கொண்ட சிரமங்களை குறைத்து மீள முடிந்ததாகவும், அதற்காக நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் ரணில் விக்ரமசிங்கே குறிப்பிட்டார்.
Next Story