அடுத்த 48 மணி நேரத்தில்... இடி, மழை, சூறாவளி..? வானிலை மையம் எச்சரிக்கை! | Heavy Rain
அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோவையின் மலைப்பகுதிகள், நீலகிரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். தென் தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா, அதை ஒட்டிய குமரிக்கடலிலும், தெற்கு இலங்கைக் கடலோரம், தென்மேற்கு, அதை ஒட்டிய மத்திய மேற்கு, தென்கிழக்கு வங்கக் கடலிலும், மற்றும் வடக்கு கேரளா-கர்நாடக கடலோரம், அதை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளிலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Next Story