சட்டவிரோத பணப் பரிமாற்றம்...சென்னையில் E.D. அதிரடி ரெய்டு

x

சென்னையில் செயல்பட்டு வரும் பிரபல கட்டுமான நிறுவனத்தின் நிறுவனர்கள் எஸ்கே பீட்டர் மற்றும் ஸ்ரீராம். இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்த நிலையில், தனக்கான சந்தை மதிப்புகளை ஸ்ரீராம் கேட்ட போது, பீட்டர் தர மறுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ஸ்ரீராம் போலீசில் புகாரளித்த நிலையில், பீட்டர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், வழக்கை தனக்கு சாதகமாக சரி செய்ய இடைத்தரகர்கள் மூலம் சுமார் 50 கோடி ரூபாய் பண பரிமாற்றம் செய்ததாக பீட்டர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இதன் அடிப்படையில், சென்னை அபிராமபுரம், கோட்டூர்புரம், அசோக் நகர் என அவருக்கு சொந்தமான 8 இடங்களில் சிஆர்பிஎஃப் காவலர்கள் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்