சென்னையில் வாழும் வெளிமாவட்ட மக்களுக்கு மட்டும் முக்கிய அறிவிப்பு
சென்னையிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளை, 5 இடங்களில் இருந்து இயக்க போக்குவரத்துத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி மாநகரப் பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கோயம்பேடு, மாதவரம், பூந்தமல்லி, தாம்பரம், கே.கே.நகர் ஆகிய இடங்களில் இருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு வழக்கமாக இயக்கப்படும் 2 ஆயிரத்து 100 பேருந்துகளுடன், சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்பட உள்ளன
Next Story