கழுத்தை நெறிக்கும் பிரச்சனை..! கணவன் மனைவி விபரீத முடிவு... நாகர்கோவிலில் அருகே அதிர்ச்சி சம்பவம்
நாகர்கோவில் தட்டான்விளை பெருமாள் நகரைச் சேர்ந்த பிரவீண்-ரூபா தம்பதியருக்கு, 2 வயதில் மகளும், ஒரு வயது மகனும் உள்ளனர். மர வியாபாரம் செய்து வந்த பிரவீணுக்கு, கடந்த சில மாதங்களாக நஷ்டம் ஏற்பட்டது. எனவே, இதனை ஈடுசெய்யவும், வியாபாரத்தை பெருக்கவும் லட்சக்கணக்கில் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. எனினும் நஷ்டத்தில் இருந்து மீள முடியாத நிலையில், கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்பக் கேட்டுள்ளனர். இதனால் மனமுடைந்த பிரவீண் தனது மனைவி ரூபாவுடன் விஷ மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து, அவர்கள் இருவரையும் உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும், இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். குழந்தைகளை பரிசோதித்தபோது, உடலில் லேசான விஷத்தன்மை இருந்தது தெரியவந்தது. கசப்புத்தன்மையால் குழந்தைகள் இருவரும் மாத்திரையை துப்பியதால் உயிர்பிழைத்ததாக கூறப்படுகிறது.