"அது எப்படி அவன் கூட..." மனைவியின் காதலனை ஓட விட்டு வெட்டிய கணவர்- தென்காசியில் பயங்கரம்
சுரண்டை அருகே உள்ள துரைச்சாமியாபுரம் பகுதியை சேர்ந்த கோட்டைசாமி என்கிற சுரேஷின் மனைவியான அருணாதேவிக்கும், முத்துக்குமார் என்பவருக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்தது. பின்னர், கணவரின் வீட்டை விட்டு வெளியேறிய அருணாதேவி, முத்துக்குமாரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தனர். இந்த விவகாரத்தில், ஆத்திரத்தில் இருந்த சுரேஷ், தனது தம்பி செல்வம் மற்றும் நண்பர் மூக்காண்டியுடன் முத்துக்குமாரின் வீட்டிற்கு சென்று, அவரை ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்தனர். அப்போது தடுக்க வந்த அருணாதேவிக்கும், கையில் வெட்டுப்பட்டது. இந்த சம்பவத்தில் தலைமறைவாக இருந்த சுரேஷ், செல்வம், மூக்காண்டி ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story