ரூ.1 கோடி கடனும் கொடுத்து வினோதமாக திருப்பி கேட்டு ஜெயிலுக்கும் சென்ற இருவர்..
ஓசூரில் ஒரு கோடி ரூபாய் பணத்தை திருப்பி கொடுக்காததால், தாய் மற்றும் மகனை கடத்திய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.கிருஷ்ணகிரி ஆசாத் நகரை சேர்ந்தவர் சசிகுமார். ஆன்லைன் பங்குசந்தை ஏஜென்சி நடத்தி வரும் இவர், திருமால், ராஜேந்திரன் மற்றும் முனுசாமி ஆகியோரிடம் ஒரு கோடியே 5 லட்சம் வாங்கியுள்ளார். ஆனால், 4 ஆண்டுகளாக பணத்தை திருப்பித் தராததால், ஆன்லைன் வியாபாரம் மூலம் பணம் அதிக அளவு கிடைக்கிறது எனக்கூறி சசிக்குமாரை 3 பேரும் வரவழைத்துள்ளனர். தாயார் தேவியுடன் சென்ற சசிகுமாரை பெங்களூருக்கு கடத்திச் சென்று, பணத்தை கேட்டு மிரட்டியுள்ளனர். நீண்ட நேரமாகியும் சசிகுமார் மற்றும் தேவி குறித்து எந்த தகவலும் இல்லாததால், தேவியின் கணவர் சேகர் போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, செல்போன் டவர் மூலம் விசாரணை மேற்கொண்ட போலீசார், பெங்களூரு சில்க் போர்டு பகுதிக்கு சென்று சசிகுமார் மற்றும் தேவியை மீட்டனர். கடத்தலில் ஈடுபட்ட திருமால் மற்றும் ராஜேந்திரனை கைது செய்து, தலைமறைவாகியுள்ள முனுசாமியை தேடி வருகின்றனர்.