தென்காசியில் கேப் விடாமல் கொட்டிய மழை - சாலைகளில் ஆறுபோல் ஓடிய நீர்

x

தென்காசியில் பெய்த பலத்த மழையால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். நேற்று மாலை சுமார் 4 மணியளவில் தொடங்கிய மழை, இரவு 11 மணிவரை நீடித்தது. கனமழையால், பிரதான சாலைகளில் உள்ள கழிவுநீர் வடிகால் நிறைந்து, மழை நீருடன் கலந்தது. இதனால் மக்கள் சிரமத்துக்குள்ளாகினர். மேலும், சுவாமி சன்னதி பஜார், அனைக்கரை தெரு உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து காணப்பட்டது. இந்நிலையில், மழைநீருடன் கழிவு நீர் கலப்பதை தடுக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்