16 மாவட்டங்களில் கொட்டித் தீர்க்க போகும் கனமழை... வானிலை மையம் கொடுத்த வார்னிங்

x

தமிழகத்தின் 16 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, தென்கிழக்கு அரபிக்கடல், அதை ஒட்டிய மாலத்தீவு பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே இடத்தில் நிலவும் எனக் கூறியுள்ளது.இதன் காரணமாக தமிழகத்தின் 16 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என அறிவித்துள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகரில் அடுத்த 48 மணி நேரம் வானம் மேகமூட்டத்துடனும் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மீனவர்கள் அடுத்த 48 மணி நேரம் தென்கிழக்கு அரபிக்கடல், அதை ஒட்டிய லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளுக்கு செல்லக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்