ஆன்-லைன் கேமிற்கு அடிமையான அண்ணன்.... சொந்த தம்பியையே சுத்தியால் அடித்து கொன்ற கொடூரம்

x

ஆன்-லைன் கேமிற்கு அடிமையான அண்ணன்.... சொந்த தம்பியையே சுத்தியால் அடித்து கொன்ற கொடூரம்

கர்நாடகா மாநிலத்தில் கேம் விளையாட மொபைல் போன் கொடுக்காத ஆத்திரத்தில், தம்பியை அண்ணன் சுத்தியால் அடித்துக் கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஆந்திர மாநிலம் மந்த்ராலயத்தை சேர்ந்த பசவராஜ், சன்னம்மா தம்பதி கர்நாடக மாநிலம் நெரிகா கிராமத்தில் தங்கி கட்டட வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு சிவக்குமார், பிரானேஷ் என இரு மகன்கள் இருந்து வந்த நிலையில், கடந்த 16ம் தேதி இயற்கை உபாதை கழிக்க சென்ற பிரானேஷ் மர்ம நபர்களால் அடித்து கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இது குறித்து சர்ஜாபூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சிவகுமார் ஆன்-லைன் கேமிற்கு அடிமையாகி இருந்ததாகவும், கேம் விளையாட மொபைல் போன் தராத ஆத்திரத்தில் தனது தம்பி பிரானேஷை சுத்தியால் அடித்து கொன்றதும் தெரிய வந்தது.


Next Story

மேலும் செய்திகள்