22 ஆண்டுக்கு பின் கும்பாபிஷேகம்... பக்தர்கள் மீது பயங்கர தாக்குதல் "நாங்களாம் உள்ளேயே வர கூடாதா"

x

22 ஆண்டுக்கு பின் கும்பாபிஷேகம்... பக்தர்கள் மீது பயங்கர தாக்குதல் "நாங்களாம் உள்ளேயே வர கூடாதா" - வயிறு எரிய கதறி அழுத பெண்கள்

கும்மிடிப்பூண்டி அருகே கோயில் குடமுழுக்கின் போது சாமி தரிசனம் செய்ய வழி விடாததால், பட்டியலின மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த 2002-ல், வழுதலம்பேடில் உள்ள எட்டியம்மன் கோயிலில் வழிபட பட்டியலின மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், கோயிலுக்கு சீல் வைக்கப்பட்டது. பேச்சுவார்த்தைக்கு பின், பட்டியலின மக்கள் வழிபட அனுமதித்து முடிவு எடுக்கப்பட்டது. இந்நிலையில், 22 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற கோயில் குடமுழுக்கில் பங்கேற்க சென்ற பட்டியலின மக்களை, பட்டா வழி பாதை என கூறி மாற்று சமூகத்தினர் அனுமதிக்காததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள், அரசு பேருந்தை சிறை பிடித்து மறியலில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்