டீசலுக்கு குட்பை சொல்லும் அரசு பேருந்துகள்.. மாற்றி யோசித்த போக்குவரத்து துறை

x

அரசுப் பேருந்துகளுக்கான டீசல் செலவினம் அதிகரித்து வருகிறது. டீசல் பயன்பாட்டிற்குப் பதிலாக அரசு பேருந்துகளை மின்சார பேருந்துகளாகவோ அல்லது இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் பேருந்துகளாகவோ மாற்ற போக்குவரத்து துறை சார்பில் பல்வேறு ஆலோசனைகள் செய்யப்பட்டு அதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வந்தன... குறிப்பாக டீசலுக்கு பதிலாக இயற்கை எரிவாயு பயன்படுத்தி இயக்கினால் கிலோமீட்டர் கூடுதலாக கிடைக்க வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது... இதைத் தொடர்ந்து வெளியூர்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளை இயற்கை எரிவாயுவிற்கு மாற்ற போக்குவரத்து கழகங்கள் மூலம் முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் சென்னை மற்றும் விழுப்புரம் போக்குவரத்து கழகங்களில் 2 இயற்கை எரிவாயு பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன... இதற்கு வரவேற்பு கிடைத்தால் தொடர்ந்து ஒவ்வொரு பேருந்துகளாக இயற்கை எரிவாயு பயன்பாட்டிற்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்