"சொத்துக்கள் முடக்கம்.." - அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
வேலூர் மண்டலத்தில் உள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின், இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளராக இருந்தவர் பன்னீர் செல்வம். இவருக்கு தொடர்பான இடங்களில், கடந்த 2020ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். இதில் 7.54 கோடி அளவிலான சொத்துக்கள் லஞ்சம் மூலம் வாங்கப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து, சொத்துக்குவிப்பு வழக்கு பதியப்பட்டு, இதனை அமலாக்கத்துறையினர் விசாரித்து வந்தனர். இந்நிலையில், குற்றம்சாட்டப்பட்ட பன்னீர் செல்வத்தின் 1.12 கோடி மதிப்பிலான ஆறு அசையா சொத்துக்களை அமலாக்கத்துறையினர் முடக்கியுள்ளனர்
Next Story