வனச்சரகர்களுக்கும் நீதிபதிக்கும்..சமரச நீதி மையத்தில் திடீர் சலசலப்பு

x

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் சமரச நீதி மையத்தில் நடைபெற்ற கூட்டத்தில், வனச்சரகர்களுக்கும், நீதிபதிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்கள், தங்கள் உற்பத்தி பொருட்களை, அமாவாசை தினத்தன்று சதுரகிரி வனப்பாதையில் விற்பனை செய்ய அனுமதி வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை நேரில் சந்தித்த சமரச தீர்வு மையத்தின் செயலாளர் நீதிபதி இருதய ராணி, நேற்று விசாரணை நடைபெறும் என்று அறிவித்திருந்தார்.

இந்நிலையில் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள உள்ள சமரச நீதி மையத்தில் வனத்துறை அதிகாரிகளை வரவழைத்து நீதிபதி இருதய ராணி விசாரணை நடத்தினார். அப்போது, வனச்சரகர்களுக்கும் நீதிபதிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வனப் பாதுகாப்பு சட்டத்தின்படியும், உயர் அதிகாரிகளின் உத்தரவுக்கு கட்டுப்பட்டுதான் நடக்க முடியும் என்று வனச்சரகர்கள் கூறியதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அவர்களை எச்சரித்த நீதிபதி, இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபரிடம் விசாரித்து, வழக்கு பதிவு செய்து உரிய தீர்வு காண வேண்டும் என்று உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்