16ம் தேதி முதல் வெள்ள நிவாரண டோக்கன்... ரூ.6000தை தொடர்ந்து ரூ.1000 ரொக்கம் - வெளியான தகவல்

x

சென்னை உள்பட 4 மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு அறிவிக்கப்பட்ட 6 ஆயிரம் ரூபாய் நிவாரணத்திற்கு, வருகிற16-ந்தேதி டோக்கன் வழங்கி, 10 நாட்களில் முடிக்க இருக்கிறார்கள். ரேஷன் கடைகள் மூலம் இந்த பணத்தை கொடுத்து முடித்ததும், அடுத்த மாதம் பொங்கல் பரிசு பொருட்களுடன் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டிய நிலையில், அரசு உள்ளது. பொங்கல் பரிசு பொருட்கள் இதுவரை கொள்முதல் செய்யப்படாத நிலையில், ரொக்கப் பணம் கூடுதலாக வழங்கவே அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. தமிழ்நாடு அரசின் அடுத்தடுத்த அறிவிப்பால், தமிழகம் முழுவதும் 2 கோடிய19 லட்சம் குடும்பங்களுக்கு ஜாக்பாட் அடிக்க இருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்