கடலில் காணாமல் போன மீனவர்..குமரியில் ஏற்பட்ட சோகம்..

x

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து, கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ராகப்பன் என்ற மீனவர் கடலில் தவறி விழுந்து மாயமாகினர். இரண்டு நாட்களாக தேடிய நிலையிலும் கண்டறிய முடியாததால், சக மீனவர்கள் சோகத்துடன் கரை திரும்பி உள்ளனர். இதைத்தொடர்ந்து குமரி மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகளிடம், ராகப்பன் காணாமல் போனது பற்றி மீனவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்