800 ஆண்டுகள் பழமையான கோயிலில் தீர்த்த குடம் எடுத்து திருவிழா..மண்சிலைகள் வைத்து கிராம வழிபட்ட மக்கள்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள பல்லக்காபாளையத்தில் 18 கிராமங்களை தேரில் வலம் வந்த முனியப்ப சாமியை மக்கள் பயபக்தியுடன் வழிபட்டனர்... 800 ஆண்டுகள் பழமையான செங்கமா முனியப்பன் கோயிலில் பொங்கல் விழாவை முன்னிட்டு காவிரி ஆற்றில் இருந்து தீர்த்த குடம் எடுத்து வந்து சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது... 18 கிராம மக்கள் தங்கள் காவல் தெய்வமான முனியப்பன் வீற்றிருந்த தேருடன் தங்கள் கிராமங்கள் வழியே வலம் வந்தனர்... தொடர்ந்து கோவிலில் பக்தர்கள் விதவிதமான மண்சிலைகள் வைத்து வழிபட்டனர்...
Next Story