சொத்திற்காக சித்தப்பா செய்த கொடூரம்! துண்டு துண்டாக வீசப்பட்ட பாகங்கள் விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்

x

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடி பெருந்தலையூரில் உள்ள ஆற்றில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் தலை, கை, கால்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம் மிதந்து வந்தது. தகவலின் பேரில் வந்த போலீசார், முகம் அழுகிய நிலையில் உடலின் பாகங்களை மீட்ட போலீசார், விசாரணை மேற்கொண்டதில், கூத்தம்பூண்டியை சேர்ந்த சுரேஷ் என தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில், சொத்துக்கு ஆசைப்பட்டு, சுரேஷின் சித்தப்பாவான அய்யாசாமி என்பவர், இந்த கொடூர கொலையை செய்தது தெரியவந்தது. அதாவது மதுபோதையில் இருந்த சுரேஷை, அய்யாசாமி தாக்கி கொலை செய்துவிட்டு, பின்னர் தலை, கை, கால்களை துண்டு துண்டாக வெட்டியது விசாரணையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், 10 மாதங்களாக தலைமறைவாக இருந்த அய்யாசாமியை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்