அரசியல் பிரமுகர் வீட்டில் ED ரெய்டு.. லாக்கர் சாவியை கைப்பற்றிய அதிகாரிகள்

x

வேடசந்தூரில், அமலாக்கத் துறையினர் விடிய சோதனையில் ஈடுபட்டனர்.


தின்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஒன்றிய திமுக செயலாளர் வீரா சாமிநாதன், வீட்டுக்கு நேற்று மதியம் 2 மணி அளவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்து சோதனையை தொடங்கினர்.

அவர்களில் மற்றொரு பிரிவினர் தமுத்துப்பட்டியில் உள்ள தோட்டத்து வீட்டுக்கு சென்று அங்கும் சோதனையில் ஈடுபட்டனர். மாலை 6.30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்ட நிலையில், சிறிது நேரத்தில் மீண்டும் அங்கு வந்து சோதனையை தொடர்ந்தனர்.

அப்போது வீட்டில் இருந்த லாக்கர் சாவியை அதிகாரிகள் கேட்ட நிலையில், கோயம்புத்தூரில் இருந்து வீரா சாமிநாதனின்l உதவியாளர் சூர்யா என்பவர் காரில் கொண்டு வந்து சாவியை ஒப்படைத்தார். லாக்கர் சாவியை கைப்பற்றிய அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விடிய,விடிய சோதனை நடத்தினர். சோதனையை முன்னிட்டு 30-க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.



Next Story

மேலும் செய்திகள்