ஒன்றரை வயது குழந்தைக்கு அநியாயமாக வந்த சாவு...நினைத்து நினைத்து உயிரை விட்ட தாய்
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே நாய் கடித்து இறந்த ஒன்றரை வயது குழந்தையின் தாய் நந்தினி தூக்கிட்டு த*கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொடிக்களம் கிராமத்தை சேர்ந்தவர்கள் சக்திவேல் - நந்தினி தம்பதி. இவர்களின், ஒன்றரை வயது குழந்தையான தஷ்விந்குமார், கடந்த ஜூன் மாதம் நாய் கடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குபதிந்த ஆவினங்குடி போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், மனஉளைச்சலில இருந்து குழந்தையின் தாய் நந்தினி வீட்டில் தூக்கிட்டு த*கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பின்னர், தகவலறிந்து வந்து உடலை கைப்பற்றி போலீசார், பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், விசாரணை நடத்தி வருகின்றனர்..
Next Story