வயிறு உபாதையால் ஒய்வு அறையில் படுத்த டாக்டர்... அப்படியே பிரிந்த உயிர் - இறப்பின் மர்மம் என்ன?
கோவை அரசு மருத்துவமனையில், கேரளாவை சேர்ந்த பயிற்சி மருத்துவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
கேரள மாநிலம் அட்டபாடியை சேர்ந்த சந்தோஷ், கோவை மதுக்கரை அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக உள்ளார். மேலும், கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதுகலை 2 ஆம் ஆண்டு படித்தும் வந்தார். இந்நிலையில் வழக்கம்போல் மதுக்கரை அரசு மருத்துவமனைக்கு வந்த சந்தோஷ், வயிறு உபாதை என்று கூறிவிட்டு ஒய்வு அறைக்கு சென்று தூங்கியுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் அவர் எழுந்திருக்காததால், சக மருத்துவர்கள் அவரை எழுப்ப முயன்றனர். அப்போதுதான், அவர் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story