பால்கனியில் கேட்ட சத்தம்.. நள்ளிரவில் நடுங்கிய திமுக பிரமுகர் வீடு.. திடுக் பின்னணி

x

திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல்குண்டு வீசிய சம்பவத்தில் தேடப்பட்டு வந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்

தஞ்சாவூர் மாவட்டம் சித்துக்காடு கிராமத்தில் ராதாகிருஷ்ணன், திமுக கிளைச் செயலாளராக உள்ளார்.

கடந்த 14ந் தேதி வெளியூர் சென்றபோது, நள்ளிரவில் அவரது வீட்டு பால்கனியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், விநாயகர் கோயில் கட்டுமான பணி கணக்கு மற்றும் கும்பாபிஷேகம் தாமதம் தொடர்பாக ரவிக்குமார், சிவனேசன், அஜய் குமார் ஆகியோரை ராதாகிருஷ்ணன் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும் ராதாகிருஷ்ணன் வீட்டின் பால்கனியின் மீது பெட்ரோல் குண்டை வீசியது தெரியவந்தது. போலீசாரின் வாகன சோதனையில் பிடிபட்ட ரவிக்குமார், அஜய் ஆகியோரை கைது செய்து போலீசார், அவர்கள் தந்த தகவலில், சிவனேசனையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்


Next Story

மேலும் செய்திகள்