"இன்னக்கி அன்னதானம் போட கூடாது..' விடாமல் துரத்தும் 2 எழுத்து அசிங்கம் - கலங்கிய கர்ப்பிணி

x

தரும‌புரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே தேர் திருவிழாவில், சாதிய பிரச்சினையால் அன்னதானம் செய்ய விடாமல் தடுத்த‌தாக பெண் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

பாப்பிரெட்டிப்பட்டி அருகே இருளப்பட்டியில் காணியம்மன் கோயில் தேர் திருவிழாவில், அன்னதானம் செய்து நேர்த்திக்கடன் செலுத்த கர்ப்பிணி ஒருவர் சென்றிருந்தார். ஆனால், பட்டியலின பெண் என்பதால், வேறு ஒரு நாளில் அன்னதானம் வழங்க வேண்டும் என கோயில் நிர்வாகத்தினர் கூறியுள்ளனர். மேலும் காவல்துறைக்கும் தகவல் அளித்த‌தால், பட்டியலின பெண் சமையல் செய்துக் கொண்டிருந்த இடத்திற்கு சென்று, கேஸ் இணைப்பை துண்டித்து, கோயிலுக்குள் நுழையக்கூடாது என்று வெளியேற்றியுள்ளனர். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயிலில், சாதிய ரீதியில் செயல்படுவதாகவும், அதற்கு காவல்துறை துணை போவதாகவும் பாதிக்கப்பட்ட பெண் வேதனையுடன் தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் இந்த பிரச்சினை இருப்பதால், தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்