திடீரென மாயமான காதல் ஜோடி..காதலனின் தாய்க்கு நேர்ந்த கதி - காதலி வீட்டாரின் அநாகரிக செயல்
திடீரென மாயமான காதல் ஜோடி..காதலனின் தாய்க்கு நேர்ந்த கதி - காதலி வீட்டாரின் அநாகரிக செயல்
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே காதல் விவகாரத்தில் பெண்ணை அடித்து கடத்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கீழ்மொரப்பூரை சேர்ந்த செல்வம்- முருகம்மாள் தம்பதியின் மகன் சுரேந்தர் என்பவரும், கணபதிபட்டியை சேர்ந்த இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு கடும் எதிர்ப்பு வந்தநிலையில் இருவரையும் காணவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பெண்ணின் உறவினர்கள் 20 பேர், சுரேந்தரின் வீட்டுக்கு வந்து அவரது பெற்றோரை தாக்கியதுடன், தாய் முருகம்மாளை அடித்து கடத்தி சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Next Story