துரோகம் செய்து வளைகாப்பு நடத்திய மருமகனையும், சம்பந்தியையும் கன்னத்தில் அறைந்து பரபரப்பாக்கிய பெண்

x

மகளின் வாழ்க்கையை பாழாக்கி, வேறொரு பெண்ணை திருமணம் செய்த மருமகனையும், அவரின் தந்தையையும் பெண்ணின் தாய் ரோட்டில் வைத்து கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் சிந்து. 24 வயதான இவருக்கும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த வேடியப்பன் என்பவருக்கும் கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணமான சில மாதங்களில் சிந்துவை அவரது மாமியார் அவதூறாக பேசி தொல்லை கொடுத்து வந்ததாகவும், தொடக்கத்தில் இருந்தே திருமணத்தில் உடன்பாடில்லாமல் இருந்த அவர், தன் தம்பியின் மகளை மகனுக்கு மணமுடித்து கொடுக்க முயன்று வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனிடையே, சிந்துவின் கணவர் வேடியப்பனுக்கு கடந்த 9 மாதங்களுக்கு முன்பாக அவரின் தாய்மாமன் மகளுடன் உறவினர்கள் திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில், நீதிமன்றத்தில் ஜீவனாம்சம் கேட்டு சிந்து வழக்கு தொடர்ந்த நிலையில், இரு தரப்பும் வழக்கு விசாரணைக்காக அரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு வந்துள்ளனர். அப்போது, தன் மகளை ஏமாற்றி விட்டு, வேறொரு பெண்ணை திருமணம் செய்து வளைகாப்பு நடத்திய வேடியப்பன் மீது ஆத்திரத்தில் இருந்த சிந்துவின் தாய் மல்லிகா, நீதிமன்றத்திற்கு வெளியே வைத்து வேடியப்பனையும், அவரது தந்தையையும் கண்ணத்தில் அறைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்