காரில் ஏற்றப்பட்ட கர்ப்பிணிகள்... விரட்டி சென்ற அதிகாரிகளுக்கு அதிர்ச்சி.. தருமபுரியில் பரபரப்பு
சட்ட விரோதமாக கருவில் உள்ள சிசுவின் பாலினம் கண்டறியும் கும்பல், பென்னாகரம், மேச்சேரி, ஓமலூர், சேலம் ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கர்ப்பிணி பெண்களை காரில் அழைத்து செல்வதாக சுகாதாரத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத்தொடர்ந்து அந்த கும்பலை கண்காணித்த மருத்துவ குழுவினர், பெரம்பலூரில் உள்ள மருந்தகத்தில் சட்ட விரோதமாக சிசுவின் பாலினத்தை கண்டறியும் போது மடக்கிப் பிடித்தனர். விசாரணையில், பாலினம் கண்டறிய 20 ஆயிரம் ரூபாய் வரை வசூல் செய்ததும், இதற்கு ஏரியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றும் சுமதி இடைத்தரகராக செயல்பட்டதும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, செவியலிர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதுடன், அவரது வீட்டிற்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.
Next Story