பிரசவ வார்டுக்குள் குரங்குகள் அட்டகாசம்.. அதிர்ச்சியில் நோயாளிகள்
தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குரங்குகள் அட்டகாசத்தால் நோயாளிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மருத்துவமனையில் பிரசவ வார்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திடீரென குரங்குள் புகுந்து நோயாளிகள் வைத்திருந்த உணவு பொருட்களை தூக்கி செல்கிறது. இதனால் அச்சமடைந்த நோயாளிகள் மருத்துவமனை அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, குரங்குகளை பிடிக்க கூண்டுகள் அமைத்து காவலாளிகள் கண்காணித்து வருகின்றனர்.
Next Story