ஹாஸ்பிடல் சென்று வீடு திரும்பிய சிறுமியை கடத்தி செய்ய கூடாததை செய்ய துணிந்த அரசியல் பிரமுகர்
தருமபுரி மாவட்டம் அரூரில் 14 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக 59 வயது திமுக பிரமுகரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
அரூரைச் சேர்ந்த அந்த சிறுமி, தலைவலிக்கு சிகிச்சை பெற அரசு மருத்துவமனைக்குச் சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அவரிடம் பேச்சுக் கொடுத்த திமுக பிரமுகர் முருகேசன், சிறுமியை அத்தை வீட்டில் விடுவதாக கூறி, தனது இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றார். காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றதால் சந்தேகம் அடைந்த சிறுமி இருசக்கர வாகனத்தில் இருந்து இறங்கியபோது, அவரிடம் முருகேசன் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றதாக தெரிகிறது. அவரிடம் இருந்து தப்பி வந்த சிறுமி, தனது அத்தையிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். நடந்த சம்பவத்தை வெளியே சொன்னால் கொன்று விடுவதாக முருகேசன் மிரட்டியதாகவும் அந்த சிறுமி கூறியுள்ளார். இதையடுத்து சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் முருகேசனை அரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.