மக்களே உஷார்...தமிழகத்தில் அதிகரிக்கும் டெங்கு..!

x

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு யாரும் அனுமதிக்கப்படாத நிலையில், மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 150-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் டெங்குவால் பாதிக்கப்பட்டு 37 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தினந்தோறும் 2 முதல் 3 நபர்கள் டெங்குவால் பாதிக்கப்படுவதாகவும், டெங்கு மற்றும் மர்மக்காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க போதிய அளவில் மருந்து மாத்திரைகள் இருப்பில் உள்ளதாகவும் மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்