ஒரே கையில் ரூ.30 கோடி...ரகசிய தகவல் - நேரில் பார்த்து மிரண்ட சிபிஐ
ஒரே கையில் ரூ.30 கோடி...ரகசிய தகவல் - நேரில் பார்த்து மிரண்ட சிபிஐ
30 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருளை வெளிநாட்டில் இருந்து கடத்தி வந்தவரை டெல்லி விமான நிலையத்தில் சிபிஐ கைது செய்தது.
இ்ந்தியாவை பூர்விகமாக கொண்ட ஜெர்மன் நாட்டை சேர்ந்த அசோக் குமார் என்பவர், தோஹாவில் இருந்து, இன்டிகோ விமானத்தில் டெல்லி வந்துள்ளார். பொம்மைகளை கொண்டு வந்த அவர், அதில் கோகைனை மறைத்து வைத்து கடத்தி வருவதாக சிபிஐக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்படி, டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் சோதனை நடத்தியபோது, பொம்மைகளில் மறைத்து கோகைன் கடத்தி வந்தது தெரியவந்தது. 30 கோடி ரூபாய் மதிப்புள்ள 270 மாத்திரைகள் வடிவிலான 6 கிலோ கோகைன் போதைப்பொருளை பறிமுதல் செய்த சிபிஐ, அசோக்குமாரையும் கைது செய்தது.
Next Story