தொடர் பாலியல் தொல்லை கொடுத்த மகன் .. கண்டம் துண்டமாக வெட்டி போட்ட தாய்

x

கடலூர் மாவட்டம் தூக்கணம்பாக்கம் அருகே உள்ள பள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளியான 52 வயது பெண்ணின் மகன் டிப்ளமோ படித்து விட்டு வேலைக்கு செல்லாமல் எந்நேரமும் வீட்டிலேயே போதைக்கு அடிமையாகக் கிடந்துள்ளார்... கடந்த சில ஆண்டுகளாக அவர் பெற்ற தாய் என்றும் பாராமல் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்... இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத தாய் கடந்த 2020ம் ஆண்டு காவல்நிலையத்தில் மகன் மீது புகாரளித்துள்ளார்... அந்த புகார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு மகனை போலீசார் எச்சரித்து அனுப்பினர். இருந்தாலும் தொடர்ந்து அவர் தனது தாய்க்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த நிலையில் இன்று அதிகாலையில் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த அவர் மீண்டும் தாயைப் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்... இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத தாய் மண் வெட்டியைக் கொண்டு தனது மகனை வெட்டிக் கொலை செய்தார்... தொடர்ந்து காவல் நிலையத்தில் சரணடைந்து நடந்த சம்பவத்தைக் கூறியுள்ளார்... அதிர்ச்சி அடைந்த போலீசார் மகனின் உடலைக் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்