பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவு

பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவு
x


பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையக் கூட்டம் நடத்த அனுமதித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, இட ஒதுக்கீடு குறித்து எந்த முடிவும் எடுக்கக்கூடாது என உத்தரவிட்டுள்ளது.20 சதவிகித இட ஒதுக்கீட்டில், உள் ஒதுக்கீடு வழங்கியதை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்தது. உச்ச நீதிமன்றமும் அதை உறுதி செய்தது. இந்நிலையில், பிற்படுத்தப்பட்டோர் நல ஆணைய தலைவர், வரும் 31ஆம் தேதி கூட்டம் நடத்த முடிவு செய்து கடிதம் அனுப்பியுள்ளார். இதை சுட்டிக்காட்டி, கூட்டத்துக்கு தடைகோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த மதுரைக் கிளை, கூட்டம் நடத்த அனுமதி அளித்துள்ளது. ஆனால், இடஒதுக்கீடு தொடர்பான ஆலோசனை நடத்தவும், அதுசார்ந்து முடிவெடுக்கவும் கூடாது என உத்தரவிட்டுள்ளது. மேலும், மத்திய, மாநில பிற்படுத்தப்பட்டோர் நல ஆணைய தலைவர்கள் பதிலளிக்க உத்தரவிட்ட மதுரைக் கிளை, 4 வாரங்கள் வழக்கை தள்ளி வைத்துள்ளது.



Next Story

மேலும் செய்திகள்