10 ஆண்டுகளாக வாடகை தராத கவுன்சிலர்.. வீட்டின் உரிமையாளருக்கு நடந்த சோகம்
ஆவடியைச் சேர்ந்த சிவப்பிரகாசம் என்பவர் தீயணைப்புத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள தனக்கு சொந்தமான வீட்டை திமுக கவுன்சிலராக இருக்கும் விஜயலட்சுமி குடும்பத்திற்கு வாடகைக்கு விட்டுள்ளார். இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக வாடகை தராமல், அவ்வப்போது சிறு சிறு தொகையை மட்டும் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிவப்பிரகாசம், வாடகை கொடுக்கும் படியும் அல்லது வீட்டை காலி செய்யும்படியும் கூறியுள்ளார். இதனால் விஜயலட்சுமியின் கணவர் விஜயகுமாருக்கும், சிவப்பிரகாசத்திற்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்ட நிலையில், சிவப்பிரகாசத்தை விஜயக்குமார் தள்ளிவிட்டதாகவும், இதனால் அவர் காயம் அடைந்ததாகவும் தெரிகிறது. இது தொடர்பான புகாரில் விஜயகுமார் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Next Story