கோவை, சூலூர் விமான படை தளத்தின் உத்தரவு.. "யாராலயும் வாங்க முடியாது"

x

கோவை மாவட்டம், சூலூர் விமான படை தளத்தின் உத்தரவை திரும்பப் பெற வேண்டுமெனக் கோரி கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காடாம்பாடி ஊராட்சியில் விமான படை தளத்திற்கு சொந்தமான பகுதி அமைந்துள்ளது. இந்நிலையில், இதன் சுற்றுவட்டார பகுதியில் 4 கிலோமீட்டர் தொலைவிற்கு கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேண்டுமென்றால், விமான படை தளத்தில் அனுமதி சான்று பெற வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் நடைமுறை சிக்கல் இருப்பதால் ஏழை மக்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி, இந்த உத்தரவை உடனடியாக திரும்ப பெற வேண்டுமென கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்