உயிர் பிரிந்த பிறகும் சேவை செய்யும் உடல்.. கோவையில் நெகிழ்ச்சி
கோவையில் ஏழை எளியோருக்கு பல்வேறு சட்ட உதவிகளை செய்து வந்த மூத்த வழக்கறிஞர் ஞானபாரதியின் உடல், அவரது விருப்பப்படியே அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.
வடவள்ளி நவாவூர் பகுதியை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் ஞானபாரதி. 76 வயதான இவர், உடல் நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் காலமானார். உயிரிழப்பதற்கு முன் தனது உடலை அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்க வேண்டும் என குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அவரது உடல், அவரது விருப்பப்படியே கோவை ESI மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது. பத்திரிகையாளராக இருந்து வழக்கறிஞராக மாறிய ஞானபாரதி, ஏழை எளியோருக்கு பல்வேறு சட்ட உதவிகளை செய்துள்ளார். தற்போது இறந்த பின்பும் அவரது உடல் மருத்துவமனைக்கு சேவை செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story