கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி முதல்வர் நிவாரணம் அறிவிப்பு
கடலூர் மாவட்டத்தில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். இது தொடர்பான அவரது அறிக்கையில், வெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த இரு சிறுவர்கள் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த செய்தி கேட்டு வேதனை அடைந்ததாகவும், அவர்களது குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் எனவும், அவர் அறிவித்துள்ளார்.
Next Story