“`சிட்டிசன்’ல கூட ஊர கண்டுபிடிச்சிட்டாங்க.. ஆனா இந்த ஊர் மேப்லயே இல்லையாம்“ - குமுறும் மக்கள்

x

சிட்டிசன்’ல கூட ஊர கண்டுபிடிச்சிட்டாங்க

ஆனா இந்த ஊர் மேப்லயே இல்லையாம்

இங்க பெண் கொடுக்கவே பயப்புடுறாங்க“

அடுத்த அத்திப்பட்டி.. குமுறும் மக்கள்

சிதம்பரம் அருகே சின்ன காரமேடு என்ற ஊரில் அடிப்படை வசதியில்லாததால்... பெண் கொடுக்கக் கூட மறுப்பதாக குமுறும் கிராம மக்களின் வேதனையை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

ஏஐ, ரோபோட் என தொழில்நுட்ப ரீதியாக உலகம் முன்னேறி வரும் காலத்தில்.. தங்கள் ஊரே ஒட்டு மொத்தமாக புறக்கணிக்கப்படுவதாக புலம்புகின்றனர், சின்னக்காரமேடு கிராம மக்கள்...

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது தான் சின்னகார மேடு கிராமம்...

சுமார் 120 குடும்பத்தினர் வசிக்கும் இந்த கிராமமானது, மக்கள் வாழ உகந்த இடமில்லை என குற்றஞ்சாட்டுகின்றனர் கிராம மக்கள்...

காரணம்.. குடிக்க நீரின்றி தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதோடு, மற்ற கிராமங்களில் உள்ள சாலை வசதி, போக்குவரத்து வசதி, நியாய விலைக்கடை கூட எட்டாக் கனியாகவே இக்கிராம மக்களுக்கு அமைந்துள்ளது...


Next Story

மேலும் செய்திகள்