"யானை தாக்கி 10 ஆண்டுகளில் 75 பேர் பலி" வனத்துறைக்கு பொதுமக்கள் கண்டனம்
நீலகிரி மாவட்டம் சேரம்பாடியில், காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க தவறிய வனத்துறையினரை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 10 ஆண்டுகளில், சேரங்கோடு ஊராட்சியில் 75-க்கும் மேற்பட்டோர் காட்டு யானை தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக கூறிய பொதுமக்கள், தற்போது பகல் நேரங்களில் உணவு தேடி அவை ஊருக்குள் வருவதாக குற்றம்சாட்டினர். மேலும், யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்...
Next Story