இந்த மாதிரி புது வீட்டுக்கு தான் செம டிமாண்ட்டாம்.. மாறும் டிரெண்ட்.. சென்னையோட பல்ஸும் மாறுதாம்

x

நான்கு கோடி ரூபாய்க்கும் அதிக விலை கொண்ட வீடுகள்

மற்றும் அபார்ட்மென்ட்கள், ஆடம்பர வீடுகள் என்று

வகைப்படுத்தப்படுகின்றன.

இந்தியாவின் முக்கிய நகரங்களில், ஆடம்பர வீடுகள் விற்பனை அளவு 2022ல் மொத்தம் 7,395ஆக இருந்து, 2023ல் 12,935ஆக, 75 சதவீதம் அதிகரித்துள்ளதாக CBRE ரிசர்ச் ஆய்வறிக்கை கூறுகிறது.

முதல் இடத்தில் உள்ள டெல்லியில் ஆடம்பர வீடுகள் விற்பனை 2022ல் 1,860ஆக இருந்து 2023ல் 5,530ஆக,

197 சதவீதம் அதிகரித்துள்ளது.

இரண்டாம் இடத்தில் உள்ள மும்பையில் ஆடம்பர வீடுகள்

விற்பனை 2022ல் 3,390ஆக இருந்து 2023ல் 4,190ஆக,

24 சதவீதம் அதிகரித்துள்ளது.

மூன்றாம் இடத்தில் உள்ள ஹைதராபாதில், ஆடம்பர வீடுகள் விற்பனை 2022ல் 1,240ஆக இருந்து 2023ல் 2,030ஆக, 64 சதவீதம் அதிகரித்துள்ளது.

நான்காம் இடத்தில் உள்ள புனேவில் ஆடம்பர வீடுகள்

விற்பனை 2022ல் 190ஆக இருந்து 2023ல் 450ஆக,

144 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்த பட்டியலில் ஐந்தாம் இடத்தில் உள்ள கொல்கொத்தாவில், ஆடம்பர வீடுகள் விற்பனை 2022ல் 300ஆக இருந்து 2023ல் 310ஆக, 3 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஆறாம் இடத்தில் உள்ள பெங்களூருவில், ஆடம்பர வீடுகள் விற்பனை 2023ல் 265ஆக, 2022 அளவில்அப்படியே தொடர்கிறது.

ஏழாம் இடத்தில் உள்ள சென்னையில் ஆடம்பர வீடுகள் விற்பனை 2022ல் 150ஆக இருந்து 2023ல் 160ஆக, 7 சதவீதம் அதிகரித்துள்ளது.

2023ல் விற்பனையான மொத்த வீடுகளில், ஆடம்பர வீடுகளின் விகிதம் 4 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்