"பெற்றோரை பிரிந்த குழந்தையின் பிறந்தநாள் விழா" - சென்னை ஐகோர்ட் போட்ட உத்தரவு
விவாகரத்தால் பெற்றோரைப் பிரிந்த குழந்தையின் பிறந்தநாளை குடும்பநல நீதிமன்றத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் நடத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த தம்பதியருக்கு, 4 வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுள்ளனர். குறிப்பிட்ட நாட்களில் குழந்தையை அதன் தந்தை பார்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தாய் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வரும் 24ம் தேதி குழந்தையின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ள தந்தை தரப்பில் அனுமதி கோரப்பட்டது. இதற்கு குழந்தையின் தாய் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, குழந்தையின் தாய், அவரது தந்தை மற்றும் உறவினர்கள் ஜூன் 24ம் தேதி குடும்பநல நீதிமன்றத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் காலை 11 மணிக்கு பிறந்தநாள் நிகழ்ச்சியை கொண்டாட அனுமதி வழங்கி உத்தரவிட்டார். இந்த நிகழ்வு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யவும் மாநில சட்ட பணிகள் ஆணையத்துக்கு உத்தரவிட்டார்.