ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கு... முன்னாள் திமுக எம்.எல்.ஏ, சி.பி.ஐ.க்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு
ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கு... முன்னாள் திமுக எம்.எல்.ஏ, சி.பி.ஐ.க்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு
ரியல் எஸ்டேட் அதிபர் புவனேஸ்வரன் கொலை தொடர்பாக 2012இல், தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ., ரெங்கநாதன் உள்ளிட்ட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடந்த பிப்ரவரியில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இவர்கள் மீதான குற்றச்சாட்டு நிருப்பிக்கப்படவில்லை எனக் கூறி அனைவரையும் விடுதலை செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து
புவனேஸ்வரனின் சகோதரர் மகேஸ்வரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வு, சி.பி.ஐ. மற்றும் ரெங்கநாதன் உள்ளிட்டோர் பதிலளிக்க
உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 26ம் தேதிக்கு தள்ளி வைத்தது.
Next Story