`பாதுகாப்பு கோரி மனு' - உயர்நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு
தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு வழங்குவது சாத்தியமில்லாதது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரின் கோரிக்கை சாத்தியமற்றது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், கீழமை நீதிமன்றங்களில் போதிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், நீதிமன்ற வளாகம் மற்றும் நீதிபதிகள் குடியிருப்புக்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து, வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை 18-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
Next Story