சென்னையில் சிறுவனுக்கு நடந்த பயங்கரம் - "காலில் தடம்" - தந்தை சொன்ன பகீர் தகவல்
சென்னை, கே.கே.நகரில்... வளர்ப்பு நாய் கடித்து பன்னிரெண்டாம் வகுப்பு பள்ளி மாணவர் ஒருவர் காயமடைந்துள்ளார். கே.கே.நகர் ராமசாமி சாலை பகுதியை சேர்ந்த அன்பரசு என்ற 16 வயது சிறுவன் வீட்டருகே நடந்து சென்றபோது, பக்கத்து வீட்டின் வளர்ப்பு நாய் காலில் கடித்து வைத்துள்ளது. சிகிச்சைக்கு பிறகு சிறுவன் வீடு திரும்பிய நிலையில், அவருடைய பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், நாயின் உரிமையாளரான மோகன் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story