வயிறு வலியில் துடித்த சிறுமி.. அண்ணனே பலாத்காரம் செய்த கோரம்..காதால் கேட்க முடியாத ரணக்கொடூரம்

x

வயிறு வலியில் துடித்த 11 வயது சிறுமி.. அண்ணனே பலாத்காரம் செய்த கோரம்.. காதால் கேட்க முடியாத ரணக்கொடூரம்

11 வயது சிறுமி ஒருவர் தன் பெரியப்பா மகன் உட்பட மூவரால் கடந்த ஆறு மாதங்களாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை சேர்ந்த தம்பதிக்கு 3 பிள்ளைகள் உள்ள நிலையில், தம்பதி இருவரும் மதுப் பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தம்பதியின் மூத்த மகளான 11 வயது சிறுமி... தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்திருக்கிறார். விசாரனையில், அண்ணன் முறையான தன் பெரியப்பா மகன் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமி கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனே, சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த உறவினர்கள், வில்லிவாக்கம் காவல்நிலையத்தில் புகாரளித்தனர். போலீஸ் விசாரணையில், 16 வயது சிறுவனான சிறுமியின் பெரியப்பா மகனும், எதிர் வீட்டை சேர்ந்த 16 வயது சிறுவன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த 36 வயதான டெய்லர் குமார் என்பவரும்... சிறுமியை கடந்த 6 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்து வந்தது தெரியவந்தது. சென்னையை உலுக்கியிருக்கும் இந்த சம்பவத்தில்.. 16 வயது சிறுவர்கள் இருவருடன் சேர்ந்து டெய்லர் குமாரையும் போலீசார் கைது செய்திருக்கின்றனர். பெற்றோர் இருவரும் மதுவுக்கு அடிமையானதால் தனித்து விடப்பட்ட சிறுமிக்கு நேர்ந்த இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்