சென்னை ஏர்போர்ட்டிற்கு வந்த அதிநவீன ஸ்வீப்பர் மெஷின்
சென்னை விமான நிலையத்தில், ஓடுபாதை, டாக்ஸி வே,
விமானங்கள் நிற்கும் பகுதிகளை சுத்தப்படுத்துவதற்காக
அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இரண்டு புதிய
இயந்திரங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. ரன்வே
மெக்கானிக்கல் ஸ்வீப்பர் எனப்படும் இந்த இயந்திரங்கள்
ரன்வே டாக்ஸி வே பகுதிகளை மிகத் துல்லியமாக,
அதி வேகத்தில் சுத்தப்படுத்துகின்றன. இவற்றின்
அடிப்பாகத்தில் பொருத்தப்பட்டுள்ள காந்த தகடுகள்
மூலம் ரன்வே பகுதிகளில் சிதறி கிடக்கும் இரும்பு
தூகள்களை எடுத்து அப்புறப்படுத்துகிறது.
Next Story