வீட்டிற்கு திரும்பிய நபர்... விரட்டி வந்த எமன்... தலை நசுங்கி பலி... கதறிய குடும்பத்தார்...

x

சென்னை அடுத்த மடிப்பாக்கத்தில் இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், மின்வாரிய உதவி செயற்பொறியாளர் உயிரிழந்தார். மடிப்பாக்கம் கண்ணகி தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார். சித்தாலப்பாக்கம் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளராகப் பணியாற்றி வந்தார். நேற்றிரவு மடிப்பாக்கம் வழியாக வீட்டிற்கு சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, பின்புறம் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில், நிலை தடுமாறி கீழேவிழுந்தவரின் தலை மீது சக்கரம் ஏறி இறங்கியது. இந்த விபத்தில் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே செந்தில்குமார் உயிரிழந்தார். விபத்து குறித்து பரங்கிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து மோதி விட்டு தப்பிச்சென்ற வாகனம் குறித்து விசாரித்து வருகின்றனர். செந்தில்குமாரின் உடலைக் கண்டு உறவினர்கள் கதறிஅழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்