கரையை கடக்கிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம் - சென்னையில் நிறம் மாறும் வானம்

x

கடந்த 24 மணி நேரத்தில் சின்னக்கல்லார் மற்றும் மேட்டூரில் தலா 3 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெற்று,

மதியம் ஒடிசா கடற்கரையை, பூரிக்கு அருகில் கரையை கடந்து, வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று நள்ளிரவு வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக சற்று வலுக்குறையக்கூடும் என்று கூறியுள்ளது.

கரையை கடக்கிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம் - சென்னையில் நிறம் மாறும் வானம்

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு

மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அடுத்த 3 நாட்களுக்கு தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்றும்,

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்