கேரளாவுக்கு அதிர்ச்சி கொடுத்த சென்னை ஐகோர்ட்..!
தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கனிமங்கள் கொண்டுச் செல்லலாம் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்காலத் தடை விதித்தது. தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு 10 சக்கரத்துக்கு மேல் உள்ள வாகனங்களில் கனிமங்கள் கொண்டுச் செல்ல விதிக்கப்பட்ட தடையை நீக்கிய உத்தரவை எதிர்த்து மதுரைக்கிளையில் அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு விசாரக்கு வந்த போது, சுற்றுச்சூழல் மட்டுமின்றி சாலைகளும் பாதிக்கப்படுவதால், இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நாள்தோறும் 700 லாரிகளில் கனிமங்கள் கொண்டுச் செல்லலாம் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
Next Story